நாமக்கல்லில் வரும் 29ம் தேதி எம்எஸ்எம்இ தொழிற்கடன் மேளா!
Namakkal news-நாமக்கல்லில் வரும் 29ம் தேதி எம்எஸ்எம்இ தொழிற்கடன் மேளா ( மாதிரி படம்)
Namakkal news, Namakkal news today- நாமக்கல் நகரில், தமிழக அரசின் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான லோன் மேளா நிகழ்ச்சி வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசின் சார்பில், சிறு, குறு மற்று நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதியாக்கல் முகாம் வருகிற 29ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள கோஸ்டல் ஹோட்டலில் நடைபெற உள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில்மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில், தொழில் நிறுவன உரிமையாளர்கள் தங்களது தகுதிக்கேற்ற திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தாங்கள் செய்ய உள்ள தொழில்களைத் துவக்க தேவையான கடனுதவி பெறுவதற்கான வாய்ப்பு, வசதிகள் முகாமில் உருவாக்கித்தரப்படும்.
புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் (New Entrepreneurs cum Enterprises Development Scheme [NEEDS]) : பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ மற்றும் அங்கீகரித்த நிறுவனத்தின் மூலம் தொழில் பயற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 21 வயதுமுதல் 35 வயதிற்குள்ளும், சிறப்புப்பிரிவினர் 45 வயது வரையிலும் இருக்கலாம்.- உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரையான மதிப்பில் துவங்கலாம். -திட்ட மதிப்பீட்டில் சிறப்புப் பிரிவினர் 5 சதவீதம், பொதுப்பிரிவினர் 10 சதவீதம் முதலீடாக செலுத்த வேண்டும். நிலம், கட்டிடம் மற்றும் இயந்திரங்கள் அடங்கிய திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ. 75 லட்சம் வரை மானியம் பெறலாம். 3 சதவீதம் பன்முனை வட்டி மானியம் பெறலாம். விருப்பமுள்ளோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
இதேபோல் வேலைவாய்ப்பற்ற (Unemployed Youth Employment Generation Programme [UYEGP]) : கடன் பெற விரும்புவோர் -www.msmeonline.tn.gov.in/uyegp என்ற வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ்(Prime Minister’s Employment Generation Programme [PMEGP]) :கடன் பெற விரும்புவோர் www.kviconline.gov.in/pmegpportalஎன்ற வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் (PMFME) கடன் பெற விரும்புவோர் https://pmfme.mofpi.gov.in என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எம்எஸ்எம்இ தொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழில் துவங்க விரும்புவோர் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu