நாமக்கல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் திட்டப்பணிகள்: எம்எல்ஏ துவக்கி வைத்தார்

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் திட்டப்பணிகள்:   எம்எல்ஏ  துவக்கி வைத்தார்
X

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை, எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ. 50 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு, எம்எல்ஏ ராமலிங்கம் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் வீசாணம் ஊராட்சி, ஜெஜெ நகர், நருவலூர் ஊராட்சி, காதப்பள்ளி பஞ்சாயத்து சேவாகவுண்டம்பாளையம், மாரப்பநாயக்கன் பட்டி ஊராட்சி, செங்கோடம்பாளையம் ஆகிய பகுதிகளில், நாமக்கல் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நீர்தேக்கத் தொட்டி, மகளிர் ஓய்வறை, சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி புதிய பணிகளுக்கான, பூமிபூஜை விழா நாமக்கல் அட்மா குழு தலைவர் பழனிவேலு தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள் நலங்கிள்ளி, நாச்சிமுத்து, தீபா, பழனியம்மாள், திமுக பிரமுகர்கள் பிரபாகரன்,ராஜவேல் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், பொறியாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!