/* */

தமிழகத்தில் 250 கோடி பெண்கள் அரசு பஸ்களில் இலவச பயணம்.. அமைச்சர் உதயநிதி பெருமிதம்...

தமிழகத்தில் கடந்த 20 மாதங்களில் 250 கோடி பெண் பயணிகள், அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் 250 கோடி பெண்கள் அரசு பஸ்களில் இலவச பயணம்.. அமைச்சர் உதயநிதி பெருமிதம்...
X

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், அவரது உருவச்சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், அவரது திருவுருவச் சிலை திறப்பு விழா, இன்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வரவேற்றார். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை வகித்து பேசினார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் திருவுருவச் சிலையை திறந்து வைத்து பேசியதாவது:

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, எளிமையான குடும்ப பின்னணி கொõண்டவர். ஆனால், தன்னுடைய வலிமையான தமிழ் புலமையால், பாடல்கள் எழுதி புகழ்பெற்றவர். மேலும், நாட்டின் விடுதலைக்காக முழுமையாக தமிழ் மொழியை பயன்படுத்தியவர்.

நாமக்கல் கவிஞரின் பெருமைகளை, அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது நம்முடைய கடமை. தற்போது இருக்கிற நம் சமூகம், வரலாற்றை மறக்கும் சமூகமாக உள்ளது. தலைமைச் செயலக கட்டிடத்துக்கு, நாமக்கல் கவிஞர் மாளிகை என பெயர் வைத்தவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி.

அவர் பெயர் வைத்த கல்லூரியில், அவருடைய பேரன் நான், நாமக்கல் கவிஞருக்கு சிலை வைக்க வந்துள்ளேன். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்காக ஆடிட்டோரியம் ஒன்றும், உள் விளையாட்டு அரங்கம் ஒன்றும் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். விரைவில் அவை இரண்டையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்றதும் பெண்களுக்கு இலவச டவுன் பஸ் வசதி திட்டத்திற்கு கையெழுத்திட்டார். இந்த திட்டத்தில் கடந்த 20 மாதங்களில் மொத்தம் 250 கோடி பெண் பயணிகள் அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, பல முன்னோடி திட்டங்களை தீட்டி வருகிறார். அவர் அறிவித்த புதுமைப் பெண் திட்டத்தால் தமிழகத்தில் உயர் கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்கள் முன்னேற இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. அதுவும் பத்தோடு பதினொன்றாக நிற்காமல், நாம் என்னவாக வேண்டும் என்று, ஒவ்வொருவருக்கும் மனதில் ஒரு எண்ணம் இருக்கும்.

முதலில் அது என்ன என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். அதை நோக்கி பயணிக்க தொடங்குங்கள். உழைக்க தொடங்குங்கள். உங்களால் முடியாதது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என அவர் பேசினார்.

முன்னாள் எம்.பி. சுந்தரம், நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, தர்மபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, கல்லூரி முதல்வர் பாரதி, பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

Updated On: 3 March 2023 3:30 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்