நாமக்கல் பகுதியில் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவேந்தல் நிகழ்ச்சி

நாமக்கல் பகுதியில் மறைந்த ஜனாதிபதி  அப்துல் கலாமின் நினைவேந்தல் நிகழ்ச்சி
X

Namakkal News- சேந்தமங்கலத்தில் நடைபெற்ற, மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமின் நிøவேந்தல் நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Namakkal News-நாமக்கல் பகுதியில் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

Namakkal News, Namakkal News Today- நாமக்கல் பகுதியில் மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய நாட்டின் 11வது ஜனாதிபதியாக 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பணியாற்றிய, அப்துல் கலாம் கடந்த 1931ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (டிஆர்டிஓ), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ஐஎஸ்ஆர்ஓ) ஏறத்தாழ 40 ஆண்டுகள் விண்வெளி இன்ஜினியராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவும் ராக்கெட் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பால், இவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று புகழப்பட்டார். இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி காலமாணார்.

இவரது 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, நாமக்கல் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் நடைபெற்றது. சமூக சேவை மைய தலைவரும், சினிமாப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான கோபிகாந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று தொகுப்பு புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கிப் பேசினார்.

சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் அப்துல் கலாம் நண்பர்கள் குழு சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை வகித்து, அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு அரசு அப்துல்கலாமின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்ததற்காக தமிழ்நாடு முதல்வருக்கு நிகழ்ச்சியில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மக்கள் சக்தி தொண்டு நிறுவன நிர்வாகி சாய்பாலமுருகன், கர்ணன், ராஜா, சுந்தரம், சரவணன், குமார், ஸ்ரீதர், சுரேந்திரன், பாஸ்கர், ராஜா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india