பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டங்கள்

பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டங்கள்

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில், அதன் தலைவர் ஷாஜஹான், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து விளக்கிக் கூறினார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில், மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டங்கள் நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில், மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டங்கள் நடைபெற்றது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்பேரில், மாநிலம் முழுவதும், கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகள் குறித்த விளக்க கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழக பாஜக துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி மேற்பார்வையில், கிழக்கு மாவட்டம் முழுவதம் சாதனை விளக்க கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, கிழக்கு மாவட்ட பாஜக சிறுபான்மை பிரிவு சார்பில், சிறுபான்மை சமூகத்தினரிடம் மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் ஷாஜஹான் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து, சிறுபான்மையின பொதுமக்களுக்கு விளக்கி கூறி வருகிறார். கிழக்கு மாவட்டம் முழுவதம் பல்வேறு இடங்களில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story