பராமரிப்பு பணிக்காக சேலம்-மயிலாடுதுறை ரயில், கரூர்-சேலம் இடையே ரத்து..!
கோப்பு படம்
பராமரிப்பு பணிக்காக சேலம்-மயிலாடுதுறை ரயில், கரூர்-சேலம் இடையே ரத்து
நாமக்கல்,
சேலம்-மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயில், இம்மாதம், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பராமரிப்பு பணி காரணமாக, சேலம்-கரூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சேலம்-கரூர், கரூர்-திருச்சி, திருச்சி-மயிலாடுதுறை ஆகிய பயணிகள் ரயிலை ஒன்றிணைத்து, சேலம்-மயிலாடுதுறை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம ஒப்புதல் அளித்தது. அதையடுத்து, ஆக. 28 முதல், சேலம்-மயிலாடுதுறை ரயில் சேவை துவங்கியது. இந்த நிலையில், கரூர்-மோகனூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அதையடுத்து, சேலம்-மயிலாடுதுறை-சேலம் தினசரி ரயில், இம்மாதம் முழுவதும் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடையே ரத்து செய்யப்படுகிறது என, சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று, நாளை, வரும் 9, 10, 16, 17, 23, 24, 30 ஆகிய, 9 நாட்கள், மயிலாடுதுறை-கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூர்-சேலம் இடையே ரத்து செய்யப்படுகிறது. திங்கள் முதல், வெள்ளி வரை வழக்கமாக, சேலம்-மயிலாடுதுறை ரயிலாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu