மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 19.80 லட்சம் கடன் உதவி: நாமக்கல் கலெக்டர் வழங்கல்..!

மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 19.80 லட்சம்  கடன் உதவி: நாமக்கல் கலெக்டர் வழங்கல்..!

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் உமா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 19.80 லட்சம் கடன் உதவித் தொகையினை நாமக்கல் கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல்:

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 19.80 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மார்ச் மாதம் முதல் அமலில் இருந்துவந்தது. இதனால் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறவில்லை. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால், சுமார் 2 மாதங்களுக்குப்பிறகு மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 304 மனுக்களை வழங்கினார்கள். மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர், மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்திய குழந்தைகள் நலச்சங்கம் சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற, வெண்ணந்தூர் ஒன்றியம், அக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 4-ஆம் வகுப்பு மாணவர் நித்தீஸிற்குகலெக்டர் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 19.80 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார். டிஆர்ஓ சுமன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story