கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: கூடுதல் எஸ்பி

டாஸ்மாக் மதுபான பார் உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட கூடுதல் எஸ்.பி ராஜூ பேசினார்.
நாமக்கல்லில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில், டாஸ்மாக் மதுபான பார் உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் உள்ளிட்ட்ட பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபான பார்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் எஸ்.பி. ராஜு கூட்டத்திற்கு தலைமை வகிது பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி பெற்ற டாஸ்மாக் பார்கள் 120 உள்ளது. இவைகள் அனைத்தும் அரசு நிர்ணயம் செய்த நேரங்களில் மட்டுமே செயல்பட வேண்டும். அதே போல் பார்களில் மது அருந்துவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. மது விற்பனை செய்ய அனுமதி கிடையாது. மீறி முறைகேடாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
மேலும், கடந்த 15 நாட்களில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான 2,388 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 20 லிட்டர் கள்ள சாராயம், 300 லிட்டர் சாரய ஊரல்கள் அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 179 நபர்களை கைது செய்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே முறைகேடாகவோ, கள்ளத்தனமாகவோ மது விற்பனையில் ஈடுபட்டால் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏடிஎஸ்பி எச்சரிக்கை விடுத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu