நாமக்கல்லில் 23ம் தேதி கோவை வேளாண் பல்கலை முதல் பட்டதாரிகள் சங்கமம்..!

கோப்பு படம்
நாமக்கல்லில் 23ம் தேதி கோவை வேளாண் பல்கலை முதல் பட்டதாரிகள் சங்கமம் நடக்கவுள்ளது.
நாமக்கல் :
கோவை வேளாண் பல்கலைக்கழக முதல் பட்டதாரிகள் சங்கமம் வரும் 23ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது.
கோவை அரசு விவசாயக் கல்லூரி, கடந்த 1971ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1968ம் ஆண்டு விவசாயக் கல்லூரி மாணவர்களாகச் சேர்ந்த 152 பேர், 1972ல் படிப்பை முடித்து, பல்கலைக் கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர். இந்த முன்னாள் மாணவர்களில் பலர் விவசாயத் துறை நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோராக இருந்ததோடு, சிலர் அரசுத்துறை மற்றும் வங்கி அதிகாரிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். ஒரு சிலர், தாங்கள் படித்த வேளாண் பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.
பிற்காலத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணிபுரிந்த டாக்டர் முருகேசபூபதியும், அந்த மாணவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள், 50 ஆண்டுகளுக்கு பின்னர் 2021ம் ஆண்டில் ஒன்றுகூடி, மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
வருகின்ற 23ம் தேதி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதல் பட்டதாரிகள் சங்கமம் நாமக்கலில் உள்ள, நளா ஹோட்டலில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் கோபிசங்கர், குழந்தைவேலு, ஜெயராமன், ஜனகன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu