கொங்குநாடு இன்ஜி. கல்லூரி மாணவர்கள் அதிவேக ட்ரோன்களை உருவாக்கி சாதனை

கொங்குநாடு இன்ஜி. கல்லூரி மாணவர்கள் அதிவேக ட்ரோன்களை உருவாக்கி சாதனை
X

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய அதிவேக ட்ரோன்களை, கல்லூரி சேர்மன் பெரியசாமி, முதல்வர் அசோகன் ஆகியோர் பார்வையிட்டனர்.

தோளூர்ப்பட்டி, கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மெக்கானிக்கல் துறை மாணவர்கள் அதிவேக ட்ரோன்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

தோளூர்ப்பட்டி, கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மெக்கானிக்கல் துறை மாணவர்கள் அதிவேக ட்ரோன்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள, தோளூர்ப்பட்டியில் கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி.இ மெக்கானிக்கல் படிக்கும் மாணவர்களை சுயசார்பு சிந்தனை உடையவர்களாக உருவாக்கும் வகையில், அத்துறை பேராசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

அதனடிப்படையில் பி.இ. மெக்கானிக்கல் துறை இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டில் படிக்கும் 96 மாணவர்கள் சேர்ந்து 16 அணிகளாக செயல்பட்டு 8 அதிவேக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை 24 மணிநேரத்தில் வடிவமைத்து, கல்லூரி வளாகத்தில் சோதனை ஓட்டம் நிகழ்த்திக் காட்டி சாதனை படைத்தனர்.

சானை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி சேர்மன் டாக்டர் பி.எஸ்.கே. பெரியசாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மொத்தம் ரூ.38,500-ஐ ரொக்கப்பரிசாக வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் வாகன கண்காட்சி மாணவர்களால் நடத்திக்காட்டப்ட்டது. மேலும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க உருதுணையாக இருந்த மெக்கானிக்கல் துறை தலைவர் டாக்டர் ஜெகதீஷ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் கல்வி நிறுவன சேர்மன் டாக்டர் பெரியசாமி, கல்லூரி முதல்வர் அசோகன் மற்றும் கல்லூரியின் டீன் அலுவலர் யோகப்பிரியா ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!