நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி.,

வருகிற 3ம் தேதி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் விழா, வருகிற ஜூன் 3-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு, நாமக்கல் அண்ணாசிலைஅருகில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு, மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். விழாவில் 100 திமுக மூத்த முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தின், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பிக்கள், திமுக மற்றும் சார்பு அணியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து கிழக்கு மாவடத்தில் உள்ள, அனைத்துஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்துக்களில் உட்பட்ட பகுதிகளில், கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என ராஜேஷ்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story