தீபாவளியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு : ஒரு கிலோ மல்லிகை ரூ.1,400க்கு விற்பனை..!

தீபாவளியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு :  ஒரு கிலோ மல்லிகை ரூ.1,400க்கு விற்பனை..!
X

கோப்பு படம் 

நாமக்கல் பூ மார்க்கெட்டில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பூக்கள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 1,400 ரூபாய்க்கு ஏலம்போனது. அதன் காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு :ஒரு கிலோ மல்லிகை ரூ.1,400க்கு விற்பனை

நாமக்கல் :

நாமக்கல் பூ மார்க்கெட்டில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பூக்கள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 1,400 ரூபாய்க்கு ஏலம்போனது. அதன் காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான அணியாபுரம், மோகனூர், எருமப்பட்டி, வரகூர் உள்ளிட்ட பகுதிகளில், குண்டு மல்லி, முல்லை, சம்மங்கி, அரளி, ரோஸ், ஜாதி மல்லி, கொண்டை பூ உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் பூக்களை, அறுவடை செய்து, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் தினசரி ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். விசேஷ நாட்களான திருமணம், திருவிழா, ஆயுதபூஜை, தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில், பூக்கள் விலை உயர்வதும், சாதாரண நாட்களில், குறைவதும் வாடிக்கை. அதேபோல், உற்பத்தி அதிகமாக இருக்கின்ற காலங்களில், விலை சரிவும், குறையும் நிலையில், விலை அதிகரிக்கும்.

தற்போது, தீபாவளி பண்டிகையையொட்டி, பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த, வாரம், ஒரு கிலோ மல்லிகை ரூ. 280, முல்லை ரூ. 140 முதல் 180 ரூபாய், சம்மங்கி ரூ. 40, அரளி ரூ. 100, ரோஸ் ரூ. 60, ஜாதி மல்லில ரூ. 320 என்ற விலையில் விற்பனையானது.

நேற்று, 1 கிலோ மல்லிகை ரூ. 1,400 ரூபாய், முல்லை ரூ. 1,000 முதல் 1,200, சம்மங்கி ரூ. 160, அரளி , ரூ. 230, ரோஸ் ரூ. 120, ஜாதிமல்லி ரூ. 600 என்ற விலையில் ஏலம் போனது. தீபாவளி பண்டிகையையொட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் விலையும், பலமடங்கு உயர்ந்துள்ளது. அதனால், விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
how ai is transforming business intelligence