கரூரில் விபத்தில் காயமடைந்த ஒட்டகத்திற்கு நாமக்கல்லில் அறுவை சிகிச்சை..!

கரூரில் விபத்தில் காயமடைந்த ஒட்டகத்திற்கு  நாமக்கல்லில் அறுவை சிகிச்சை..!

கரூரில் சாலை விபத்தில், காயமடைந்த பைடன் ஒட்டகத்திற்கு, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. 

கரூரில் சாலை விபத்தில், காயமடைந்த ஒட்டகத்திற்கு, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

நாமக்கல்:

கரூரில் சாலை விபத்தில் காயமடைந்த 6 வயதுடைய பைடன் ஒட்டகத்திற்கு, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆபரேசன் செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

கரூரை அடுத்த நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் மது. இவர் சொந்தமாக பைடன் என்ற 6 வயதுடைய, ஒட்டகம் ஒன்றை வளர்த்து வருகிறர். அந்த ஒட்டகத்தை அந்தப் பகுதியில் நடக்கும் கோவில் திருவிழாக்கள், சுபகாரியங்கள் மற்றும் பொருட்காட்சி போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு பயன்படுத்தி வந்தார்.


இந்த நிலையில், இன்று காலை கரூரில் இருந்து நத்தமேடுக்கு மெயின் ரோட்டில் ஒட்டகத்தை ஓட்டிச் சென்றபோது, பின்னால் வந்த மினி லாரி ஒட்டகத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், ஒட்டகத்தின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. உடனடியாக ஒட்டகத்துக்கு முதலுதரவி செய்து, சிகிச்சைக்காக சரக்கு ஆட்டோ மூலம், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர்.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நெப்போலியன் தலைமையில், டாக்டர்கள் விக்னேஷ் மற்றும் அபிஜித் ஆகியோர், ஒட்டகத்தின் காலில் அறுவை சிகிச்சை செய்து, எலும்பு முறிவை சரி செய்து கட்டுப்போட்டனர். மேலும் நவீன மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தி ஒட்டகத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 6 வயதான பைடன் ஒட்டகம் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து நல்ல முறையில் நடக்கத் தொடங்கியது. இதைத்தெடார்ந்து, இன்று மாலை அந்த ஒட்டகத்தை சரக்கு ஆட்டோவில் ஏற்றி அதன் உரிமையாளர் கரூர் கொண்டு சென்றார்.

Tags

Next Story