நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தின விழா; கோலாகல கொண்டாட்டம்

Namakkal News- நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ராணுவ அதிகாரி ரமேஷ்குமார் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
Namakkal News, Namakkal News Today- நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் உள்ள காமராஜர் கல்வி நிறுவனத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளி சேர்மன் கணேசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். செயலாளர் சதாசிவம், பொருளாளர் நடராஜன், நிர்வாக இயக்குனர்கள் சுந்தரராஜன், ஆடிட்டர் செல்வராஜ், கோவிந்தராஜ், முத்துசாமி, மாதையன், தர்மலிங்கம், பழனிசாமி, ரகுபதி, மெட்ரிக் பள்ளி முதல்வர் சுதா, சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் கீதா, பி.எட். கல்லூரி முதல்வர் கோலப்பன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
டிரினிடி கல்லூரி : நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா, கல்லூரி சேர்மன் நல்லுசாமி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் லட்சுமிநாராயணன் வரவேற்றார். செயலாளர் செல்வராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் ரமேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். தங்கம் மருத்துவமனை டாக்டர் குழந்தைவேல், கல்லூரி செயல் இயக்குனர் அருணா செல்வராஜ், உயர்கல்வி இயக்குனர் அரசுபரமேசுவரன், நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
மலர் மெட்ரிக் பள்ளி: பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, சுதந்திர தினவிழாவிற்கு பள்ளியின் பொருளாளர் வெங்கடாசலம் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி முதல்வர் ராஜசேகரன் வரவேற்றார். பள்ளி செயலாளர் கந்தசாமி, துணைத்தலைவர் ராஜேந்திரன், துணைச்செயலாளர் தங்கராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் துணை முதல்வர் மகாலிங்கம் நன்றி கூறினார்.
மேட்டுப்புதூர் அரசு பள்ளி: எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன் தலைமை வகித்தார். கூத்தம்பூண்டி பஞ்சாயத்து தலைவர் அழகேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாணிக்கம்பாளையம் செந்தில்குமார் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். பள்ளியின் இடைநிலை ஆசிரியைகள் ராஜாமணி, ஆலீஸ்வனிதா மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu