ப.வேலூரில் 150 பேர் பா.ம.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் ஐக்கியம்

பரமத்திவேலூரில், 150க்கும் மேற்பட்ட பாமகவினர், அக்கட்சியில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
ப.வேலூர் பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் பாமகவில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
நாமக்கல் லோக்சபா தொகுதி, மாவட்ட அதிமுக வேட்பாளராக ராஹா தமிழ்மணி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, பரமத்திவேலூர் சட்டசபை தொகுதியில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி தேர்தல் பிரச்சாரம் செய்து, இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது ப.வேலூர் எம்எல்ஏ சேகர் தலைமையில், பரமத்தி வேலூர் நகர பாமக பிரமுகர் விஜயராகவன், மோகனூரைச் சேர்ந்த ஆனந்த், அஜய், கேபால், கணேசன், ஓலப்பாளையம் வடிவேல் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி சால்வை அணிவித்து வரவேற்றார். ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து அதிமுக செயலாளர் பொன்னிவேலு, அபிராமி, விஜயகுமார், சந்திரமோகன் ராக்கியண்ணன் உள்ளிட்ட அதிமுகவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சியுடன் பாமக கூட்டணி சேர்ந்ததை பாமக நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை. அதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே இவர்கள் அதிமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu