நாமக்கல் மாவட்டத்தில் ஊடுபயிருக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.
தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு பராமரிப்பு செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் மானியமாக வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக் குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும், தீவன அபிவிருத்தி திட்டங்களை த மிழக அரசின், கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 60 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட மர, பழத்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1 ஹெக்டேர் பரப்பளவில் தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட வேண்டும். இதனை அரசால் தெரிவிக்கப்படும் காலம் வரை பராமரிக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் கேஏவிஐஏடிபி கிராமத்தில் உள்ள சிறு, குறு மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான மொத்த பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். தீவன விரயத்தை குறைப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் மானிய விலையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பெயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்த பட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.50 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் சாகுபடி செய்தல் மற்றும் மின்சார வசதி உடையவராகவும் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கடந்த 10 ஆண்டுகளில் அரசு திட்டங்களில் பயன்பெற்றவராக இருக்கக் கூடாது. மேலும் சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும், இத்திட்டத்திற்காக தேர்வு செய்யும் பயனாளி 50 சதவீதம் பயனாளி பங்குத்தொகை செலுத்த வேண்டும். தகுதிவாய்ந்த நபர்கள் இம்மாதம் 13ம் தேதிக்குள் தங்கள் கிராமத்திற்குட்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu