நாமக்கல் வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்க முடிவு
நாமக்கல்லில் நடைபெற்ற, கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., கலந்துகொண்டு பேசினார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை திறக்க, நாமக்கல் வருகை தரும் தமிழக முதலமைச்சருக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்க வேண்டும் என மாவட்ட திமுக செயலார் ராஜேஷ்குமார் எம்.பி. பேசினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவருமான, ராஜேஷ்குமார் எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-
வருகிற 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, காலை 11 மணி அளவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து, நாமக்கல் நகரில் பரமத்தி ரோட்டில், செலம்ப கவுண்டர் பூங்கா அருகில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின்திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார். அதன் பின்னர், நாமக்கல் & சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் பொம்மைக் குட்டை மேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில், திட்டப்பணிகளை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இவ்விரு நிகழ்ச்சிகளிலும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து திமுக செயலாளர்கள், அனைத்துப் பகுதி வார்டு செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக செயல்வீர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு, நாமக்கல்லுக்கு வருக தரும் தமிழக முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என அவர் பேசினார்.
கூட்டத்தில் நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ராணி, பாலச்சந்திரன், டாக்டர் மாயவன், பவுத்திரம் கண்ணன், விமலா சிவக்குமார், சுசிதரன், பூவராகவன், கண்ணன், அரசு வக்கீல்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ராமசுவாமி, அசோக்குமார், ஜெகநாதன், பாலசுப்பிரமணியம், நவலடி, பழனிவேல், துரைசாமி, கவுதம், செந்தில்முருகன், ஜெயபிரகாஷ், நகர செயலாளர்கள் சங்கர், ராணா ஆனந்த், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu