வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவின பதிவேடுகள் பராமரிப்பு குறித்து வழிகாட்டுதல் கூட்டம்

வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவின பதிவேடுகள்  பராமரிப்பு குறித்து வழிகாட்டுதல் கூட்டம்
X

Namakkal news- நாமக்கல்லில் நடைபெற்ற, லோக்சபா தேர்தல் வேட்பாளர்களுக்கான செலவின பதிவேடுகள் பராமரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் உமா, தேர்தல் கமிஷன் பார்வையாளர்கள் ஹர்குன்ஜித்கவுர், அர்ஜூன் பேனர்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Namakkal news- வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவின பதிவேடுகள் பராமரிப்பு குறித்து வழிகாட்டுதல் கூட்டம் நடந்தது.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் லோக்சபா தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்களுக்கு, தேர்தல் செலவின பதிவேடுகள் பராமரிப்பு குறித்த வழிகாட்டுதல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். மத்திய தேர்தல் கமிஷன் பொதுப் பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர், தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜூன் பேனர்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வேட்பாளர்களுக்கு செலவின பதிவேடு பராமரிப்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. வேட்பாளர் ஒருவருக்கு அதிகபட்ச செலவு உச்ச வரம்பு ரூ. 95 லட்சம் ஆகும். ஏப். 3ம் தேதி, 10ம் தேதி மற்றும் 16ம் தேதி ஆகிய நாட்களில் அனைத்து வேட்பாளர்களும், தங்களது செலவினப் பதிவேட்டை தேர்தல் செலவினப் பார்வையாளரின் ஆய்வுக்கு, உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். மனுத்தாக்கல் செய்த நாள் முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரையிலான அனைத்து செலவுகளும், தகுந்த ஆதாரங்களுடன் முழுமையான கணக்கு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நாமக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 22 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ சுமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) மோகன்தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
அடுத்த சில ஆண்டுகளில் AI மூலம் வந்துவரும் அற்புத மாற்றங்கள்!