முன்னாள் முதலமைச்சர் நினைவு அரங்கம் அமைக்கும் பணி: இணை இயக்குனர் ஆய்வு

Namakkal News- நாமக்கல் அருகே, முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயன் நினைவு அரங்கம் அமைக்கும் பணியை, தமிழக செய்தித்துறை இணை இயக்குனர் தமிழ்செல்வராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Namakkal News, Namakkal News Today- நாமக்கல் அருகே, சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயன் நினைவு அரங்கம் அமைக்கும் பணியை, செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2021-2022ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயனின் சேவைகளை நினைவுகூறும் வகையில், நாமக்கல் அருகே அவரது பெயரில் நினைவு அரங்கம் அமைக்க ரூ. 2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, 10.05.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நவணி தோட்டக்கூர்ப்பட்டி கிராமத்தில் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயன் நினைவு அரங்கம் அமைக்கும் பணிக்கு, வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து நினைவு அரங்கம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த, தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர் (நினைவகங்கள்) தமிழ்செல்வராஜன், நவணி தோட்டக்கூர்ப்பட்டி கிராமத்திற்கு சென்று, சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயன் நினைவு அரங்கம் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த கலத்திற்குள் முடிக்குமாறு அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் இந்திராணி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu