தீபாவளியையொட்டி தொழுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு நலத்திட்ட உதவி

தீபாவளியையொட்டி தொழுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு  நலத்திட்ட உதவி
X

தொழுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வேர்டு நிறுவனத்தின் சார்பில் தொழு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கபிலர்மலைப் பகுதியில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வேர்டு நிறுவனத்தின் சார்பில் தொழு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மும்பையைச் சேர்ந்த, தி சம்தசனி ஃபவுண்டேஷன் மற்றும் நாமக்கல், பொத்தனுர் வேர்டு நிறுவனமும் இணைந்து, கபிலர்மலை மற்றும் பரமத்தி வட்டாரத்தில் தொழுநோயால் பாதிக்கப் பட்டு குணமடைந்த 30 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கந்தசாமி கண்டார் கல்லூரியின் பொருளாதார துறை தலைவர் லோகநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பயனாளிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வேர்டு நிறுவன செயலர் சிவகாமவல்லி வரவேற்றார். பிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் வேண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் சாந்தி நன்றி கூறினார்.

Tags

Next Story