/* */

நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல் கவுன்சலிங்

நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல் கவுன்சலிங் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல் கவுன்சலிங்
X

நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு இடம் மாறுதல் தொடர்பான கவுன்சிலிங் நடைபெற்றது.

நாமக்கல்லில், அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கான, விருப்ப இடமாறுதல் கவுன்சலிங் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களில் 28 பேருக்கு விருப்ப இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஆய்வக உதவியாளர்களாக 173 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு விருப்ப இடமாறுதல் வழங்கப்பட்டது. அதன்பிறகு 6 ஆண்டுகளாக எந்தவித இடமாறுதலும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் முன்னிலையில் விருப்ப இடமாறுதல் கவுன்சலிங் நடைபெற்றது. இதில், 14 பணியிடங்களுக்கு 28 பேர் விருப்ப மாறுதல் கோரியிருந்தனர். சுழற்சி அடிப்படையிலும், பணிமூப்பு அடிப்படையிலும் தகுதியானோருக்கு நேர்காணல் மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டது.

Updated On: 29 Nov 2023 3:54 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  ஜம்முவில் அமைதியை கொண்டு வர ராணுவத்திற்கு முழு சுதந்திரம்
 2. திருவண்ணாமலை
  அதிமுக நமக்கு எதிரி அல்ல; பாஜக கூட்டணி தான் எதிரி: அமைச்சர் பேச்சு
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
 4. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 5. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
 6. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜூன்.19) மின்தடை
 7. செய்யாறு
  எல்லையம்மன், வேடியப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
 8. கோவை மாநகர்
  சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
 9. அரசியல்
  ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
 10. இந்தியா
  மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி