நாமக்கல்லில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல்லில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.
நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயிகளின் கோரிக்கைகள் நேரடியாக கேட்டறியப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பு செப்டம்பர் மாதத்திற்கான, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக, கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விவசாயிகளின் குறைகளை நேரடியாக கேட்டறிகிறார்.
இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். மேலும், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்தள்ளார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மற்றும் விவசாயிகள் எழுப்பி பேசும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வ கிடைக்கும் என்பதாலும், வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய திட்டங்கள் பற்றியும் அறிவிக்கப்படும் என்பதாலும் இந்த கூட்டத்தை அனைத்து விவசாய சங்க தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள், சாதாரண விவசாயிகள் உள்பட அனைவரும் தவறாது கலந்துகொண்டு பயன் அடையும்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்கோள் விடுத்து உள்ளார்.