சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு தனி குறியீட்டு எண்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு தனி குறியீட்டு எண்:  விவசாயிகள் சங்கம் கோரிக்கை
X
சின்ன வெங்காயத்திற்கு தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சின்ன வெங்காயம் ஏற்றுமதியை தடை செய்யாமல், அதற்கு தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், நாமக்கல் மாவட்டக்குழு சார்பில், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் பொதுமக்களின் உணவில் சின்ன வெங்காயம் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதனுடைய சுவை பொதுமக்களுக்கு மிகவும் பிடித்மானது ஆகும். மருத்துவ ரீதியாக இது மனித உடலின் ஆரோக்கியத்திலும் அங்கமாகிறது. சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில், பெரம்பலூர், அரியலூர், தென்காசி, திண்டுக்கல், திருச்சி , கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் விவசாயிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பெரிய வெங்காயம் விளைச்சல் குறைகின்ற போது, விலை அதிகரிக்கிறது. நுகர்வோர் நலன் கருதி மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கிறது. தற்போதுகூட ஏற்றுமதி வரியை 16 சதவீதம் உயர்த்தி வெங்காய ஏற்றுமதியை குறைத்துள்ளது. இதனால் பெரிய வெங்காயம் மட்டுமல்ல, சின்ன வெங்காய ஏற்றுமதியும் தடைபட்டுள்ளது.

வெளி நாடுகளில் வாழும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், சின்ன வெங்காயத்தை அதிகம் விரும்பி பயன்படுத்துகின்றனர். அவர்கள் விரும்பும் சிறிய வெங்காயத்தை தடையின்றி அங்கு அனுப்பி வைக்கவும், விவசாயிகளுக்கு உரிய கட்டுப்படியான விலை கிடைக்கவும், சின்ன வெங்காயத்திற்கு ஏற்றுமதி கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சிறு விவசாயிகள் தான் அதிக அளவில் சன்ன வெங்காயம் பயிரிடுகின்றனர். இதன் உற்பத்தி திறன் குறைவு, உற்பத்தி செலவு அதிகம்.

இந்தியாவில் பெரிய உணவகங்களில், பெரிய வெங்காயமே ஆதிக்கம் செலுத்துகிறது. பெரிய வெங்காயத்திற்கு கடன் மற்றும் மானிய உதவிகள் வழங்கப்படுகிறது. வெங்காயம் என்று பொதுவாக ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கும்போது, சின்ன வெங்காயமும் தடை படுத்தப்படுகிறது. அதனால், தமிழ்நாட்டில் சின்ன வெங்காயம்

விளைவிக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பொதுவாக வெங்காயம் என்ற தலைப்பில், பொதுவான ஏற்றுமதி குறியீட்டு எண் விதித்து ஏற்றுமதிக்கு கட்டுப்பாடோ, தடையோ விதிக்கும்போது, சின்ன வெங்காய ஏற்றுமதி பாதிக்காமல் இருப்பதற்காக, சின்ன வெங்காயத்திற்கு என தனிஏற்றுமதி குறியீடு எண் வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!