சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக மயிலாடுதுறை செல்லும் ரயிலில் கூடுதல் பெட்டிகள்..!

சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக மயிலாடுதுறை   செல்லும் ரயிலில் கூடுதல் பெட்டிகள்..!

கோப்பு படம் 

சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில், பயணிகள் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக மயிலாடுதுறை செல்லும் பயணிகள் வசதிக்காக ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் :

சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில், பயணிகள் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தென்னக ரயில்வேயில், தற்போது தலா 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் 5 பாசஞ்சர் ரெயில்களில், பயணிகள் வசதிக்காக, அக். 1 முதல் 31 வரை 12 கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதையொட்டி சேலத்தில் இருந்து ராசிபுரம், நாமக்கல், மோகனூர், கரூர், திருச்சி வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பாசஞ்சர் ரெயில் (ரயில் எண். 16811/16812) மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி, கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம் வழியாக சேலம் செல்லும் பாசஞர் ரயில் ஆகியவற்றில் இனி 8 பெட்டிகளுக்கு பதிலாக 12 பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயிலில் பயணிகள் ஏற்றிச்செல்லும் திறன் 50 சதவீதம் அதிகரிக்கப்படுவதால், இதுவரை 800 இருக்கை வசதிகள் கொண்ட இந்த ரயிலில் இனி 1,200 இருக்கைகளாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story