நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம் வாக்குப்பதிவு..!

Namakkal news- நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில், வாக்குப்பதிவு நடைபெறும் ஓட்டுச்சாவடிகளை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, கட்டுப்பாட்டு அறையில் இருந்து.கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Namakkal news, Namakkal news today- நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணிய நிலவரப்படி மொத்தம் 71.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நாமக்கல் சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,57,915 வாக்காளர்கள் உள்ளனர், ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 2,30,584 வாக்காளர்கள், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் 2,44,113 வாக்காளர்கள், பரமத்திவேலூர் தொகுதியில் 2,20,265 வாக்காளர்கள், திருச்செங்கோடு தொகுதியில் 2,30,415 வாக்காளர்கள், சங்ககிரி தொகுதியில் 2,69,270 வாக்காளர்கள் என, 6 சட்டசபை தொகுதியிலும் சேர்த்து மொத்தம் 14 லட்சத்து 52 ஆயிரத்து 562 வாக்காளர்கள் உள்ளனர்.
நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 40 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு ஓட்டுச்சாவடிக்கு 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இன்று காலை 7 மணி முதலே பொதுமக்கள் வாக்குச்சவாடிகளுக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட போலீஸ் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் மற்றும் தேர்தல் கமிஷன் பார்வையாளர்கள் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவீர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை மொத்தம் 12.80 சதவீதம் வாக்குகள் பதிவானது. 11 மணிவரை மொத்தம் 29.22 சதவீதம் வாக்குகள் பதிவானது. மதியம் 1 மணிக்கு மொத்தம் 46.31 சதவீதம் வாக்குகள் பதிவானது. மாலை 3 மணி வரை 62.42 சதவீதம் வாக்குகள் பதிவானது.
மாலை 5 மணி நிலவரப்பட்டி ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 65.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சேந்தமங்கலத்தில் 67.70 சதவீதம், நாமக்கல்லில் 67.29 சதவீதம், பரமத்திவேலூரில் 72.15 சதவீதம், திருச்செங்கோட்டில் 70.45 சதவீதம் மற்றும் சங்ககிரி சட்டச¬பை தொகுதியில் 76.29 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில். 5 மணி நிலவரப்படி மொத்தம் 71.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu