அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பொறுப்பேற்பு: கொமதேக ஈஸ்வரன் வாழ்த்து

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பொறுப்பேற்பு: கொமதேக ஈஸ்வரன் வாழ்த்து
X

ஈஸ்வரன்.

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான, இ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பல்வேறு போராட்டங்களை கடந்துவந்த, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போது கோர்ட் தீர்ப்பின்படி அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் அதிமுக பல்வேறு சிக்கல்களில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது.

அதிமுக தொண்டர்கள் இடையே நிலவி வந்த குழப்பம் இதன் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் செழித்தோங்க வேண்டுமென்றால் ஒரு மாநிலத்தில், எதிர்க்கட்சியும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது நடந்திருப்பதை வரவேற்கின்றோம். எந்த ஒரு அழுத்தத்திற்கும் ஆளாகாமல் தமிழ்நாட்டினுடைய பாதுகாப்பு, வளர்ச்சி, எதிர்காலம் இவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமாக செயல்பட, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, எம்எல்ஏ ஆன கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளதற்கு, வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் நோக்கர்கள் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!