கல்பனா சாவ்லா விருது பெற தகுதியான பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு!

Namakkal news- கல்பனா சாவ்லா விருது பெற தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
Namakkal news, Namakkal news today- மாநில அளவிலான கல்பனா சாவ்லா விருது பெற தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் 2024-ஆம் ஆண்டிற்கு, சிறந்த சாதனை புரிந்த பெண்களுக்கு வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில், மாநில அளவில் ஒருவருக்கு “கல்பனா சாவ்லா விருது” வழங்கப்படவுள்ளது. இந்த விருது பெறுவதற்கு, பெண்களில் சிறந்த சாதனை புரிந்த நபரிடமிருந்து உரிய விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் https://awards.tn.gov.in என்ற என்ற வெப்சைட்டில் பார்வையிட்டு, அதே வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருகிற ஜூலை 15 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும். மேலும் இவ்விருது தொடர்பான விபரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள, மாவட்ட சமூகநல அலுவலரை நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 04286-299460 மூலமோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu