நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம் வாக்குப்பதிவு..!

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம்  1 மணிக்கு 46.31 சதவீதம் வாக்குப்பதிவு..!
X

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஓட்டுப்போடுவதற்காக அரசு வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் பாராளுமன் தொகுதியில் மதியம் 1 மணியளவில் மொத்தம் 46.31 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நாமக்கல் சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,57,915 வாக்காளர்கள் உள்ளனர், ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 2,30,584 வாக்காளர்கள், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் 2,44,113 வாக்காளர்கள், பரமத்திவேலூர் தொகுதியில் 2,20,265 வாக்காளர்கள், திருச்செங்கோடு தொகுதியில் 2,30,415 வாக்காளர்கள், சங்ககிரி தொகுதியில் 2,69,270 வாக்காளர்கள் என, 6 சட்டசபை தொகுதியிலும் சேர்த்து மொத்தம் 14 லட்சத்து 52 ஆயிரத்து 562 வாக்காளர்கள் உள்ளனர். நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 40 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு ஓட்டுச்சாவடிக்கு 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தடுகின்றன. இன்று காலை 7 மணி முதலே பொதுமக்கள் வாக்குச்சவாடிகளுக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை மொத்தம் 12.80 சதவீதம் வாக்குகள் பதிவானது. 11 மணிவரை மொத்தம் 29.22 சதவீதம் வாக்குகள் பதிவானது. தற்போது மதியம் 1 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 47.68 சதவீத வாக்குகளும், சேந்தமங்கலம் தொகுதியில் 45.47 சதவீத சதவீத வாக்குகளும், நாமக்கல் சட்டசபை தொகுதியில் 42.65 சதவீத வாக்குகளும், பரமத்திவேலூர் சட்டசபை தொகுதியில் 46.37 சதவீத வாக்குகளும், திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில் 47.63 சதவீத வாக்குகளும், சங்ககிரி சட்டசபை தொகுதியில் 48.21 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. மதியம் 1 மணி நிலவரப்பட்டி நாமக்கல் பாராளுமன் தொகுதியில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளையும் சேர்த்து சராசரியாக மொத்தம் 46.31 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்