நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்வு: ஒரு முட்டை ரூ. 4.60

நாமக்கல்லில் முட்டை விலை மேலும்  5 பைசா உயர்வு: ஒரு முட்டை ரூ. 4.60
X

Namakkal News-   நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்வு (பைல் படம்)

Namakkal News- நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்ந்து, முட்டை கொள்முதல் விலை ரூ. 4.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Namakkal News, Namakkal News Today- நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்ந்து முட்டை கொள்முதல் விலை ரூ. 4.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். கடந்த 17ம் தேதி ரூ. 4.50 ஆக இருந்த முட்டை விலை 5 பைசா உயர்ந்து ரூ. 4.55 ஆனது. நேற்று 18ம் தேதி மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற, என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.60 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 515, பர்வாலா 484, பெங்களூர் 495, டெல்லி 510, ஹைதராபாத் 445, மும்பை 510, மைசூர் 498, விஜயவாடா 496, ஹொஸ்பேட் 465, கொல்கத்தா 575.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 96 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ மைனஸ் இல்லாத விலை ரூ. 92 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture