நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
X

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி.,

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாளை 27ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள உள்ள நளா ஹோட்டலில் நடைபெற உள்ளது.

மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலை வகிக்கிறார். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

கூட்டத்தில், மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், இளைஞர் அணி சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டங்கள் நடத்துவது குறித்தும், 2024ம் ஆண்டில் நடைபெற உள்ள பார்லி தேர்தல் குறித்தும், கட்சிக்கு தீவிர உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் மற்றும் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

முன்னாள் எம்பிக்கள், மாவட்ட, நகர, டவுன் பஞ்சாயத்து திமுக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!