/* */

நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

Namakkal news- நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்
X

Namakkal news- கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி.,

Namakkal news, Namakkal news today- நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாளை 25ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள, கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட செயலார் ராஜேஷ்குமார் எம்.பி. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

வருகிற மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், “இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் ” என்ற தலைப்பில் தேர்தலுக்கான திண்ணை பிரச்சாரம் குறித்தும் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

கூட்டத்தில், முன்னாள் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து செயலாளர்கள், பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அனைத்து சார்பு அணியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட் செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Feb 2024 11:30 AM GMT

Related News

Latest News

 1. பட்டுக்கோட்டை
  குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
 2. ஈரோடு
  அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
 3. தென்காசி
  மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
 4. காஞ்சிபுரம்
  வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
 5. காஞ்சிபுரம்
  வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
 6. லைஃப்ஸ்டைல்
  துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
 7. குமாரபாளையம்
  கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
 8. ஈரோடு
  ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
 9. காஞ்சிபுரம்
  அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
 10. காஞ்சிபுரம்
  12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!