நாமக்கல்லில் விநாயகர் சிலை ஊர்வலத்தை கண்காணிக்க ட்ரோன் ஏற்பாடு

நாமக்கல்லில் விநாயகர் சிலை ஊர்வலத்தை கண்காணிக்க ட்ரோன் ஏற்பாடு
X

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்.

நாமக்கல்லில் விநாயகர் சிலை ஊர்வலத்தை கண்காணிக்க ட்ரோன் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக எஸ்பி கூறி உள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெறும், விநாயகர் சிலை ஊர்வலத்தை சென்னையில் இருந்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் நவீன டிரோன் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் எஸ்.பி கூறினார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு 938 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 8 சோதனைச் சாவடிகள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் அமைக்கப்படும் விநாயகர் சிலைகள் உரிய அனுமதி பெற்று அமைக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரித்த பின்னரே அனுமதிக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், பரமத்தி வேலூர், இறையமங்கலம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் இதுவரை 730 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி பெற்றுள்ளனர். குறிப்பாக பதற்றமான பகுதியாக கருதப்படும் பரமத்திவேலூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு அதிநவீன கண்காணிப்பு கேமரராக்கள் பொருத்துப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளை வைத்துள்ளவர்களே கண்காணிப்பு கேமரா அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் செல்லும் போது நவீன டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வயர்லெஸ் இணைப்புகள் மூலம் இந்த கேமராக்கள் அனுப்பும் படங்களை சென்னையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு விநசாயர் சதுர்த்தி விழாவை அனைவரும் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
why is ai important to the future