நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடைக்கு ஆன்லைன் மூலம் லைசென்ஸ்

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடைக்கு லைசென்ஸ் பெறவிரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடைக்கு ஆன்லைன் மூலம் லைசென்ஸ்
X
பட்டாசு கடை (கோப்பு படம்)

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புபவர்கள் லைசென்ஸ் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

வருகிற நவ. 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வெடிபொருள் சட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசு கடைகள் வைக்க விரும்புபவர்கள் வருகிற அக். 24ம் தேதிக்குள், ஆன்லைன் மூலம் இண்டர்நெட்டில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களில், இதற்கான விண்ணப்பங்களை இண்டர்நெட் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.

விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரி குறித்த ஆதார் அட்டை, அடையாளத்திற்காக பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது டிரைவிங் லைசென்ஸ் இணைக்கப்பட வேண்டும். லைசென்ஸ் கட்டணம் ரூ. 600ஐ அரசு கருவூல சலான் மூலம் எஸ்பிஐ வங்கியில் செலுத்தி சலானை இணைக்க வேண்டும். பட்டாசு கடை அமைக்கும் இடத்திற்கான பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்த கட்டிடம் எனில் விண்ணப்பதாரர் பெயரில் பட்டா, வாடகை கட்டிடம் எனில் ஒப்பந்த பத்திரம், உள்ளாட்சி அமைப்பின் மூலம் பெற்ற வரி ரசீது, சுய உறுதி மொழி பத்திரம், கட்டிட வரைபடம் அல்லது திட்ட அனுமதி ஆகிற்றுடன் 24.10.23க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டால், தற்காலிக லைசென்சையும், நிராகரிக்கப்பட்டால் அதற்கான கடிதத்தையும் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம். தற்காலிக பட்டாசு கடை அமைக்க லைசென்ஸ் கேட்டு விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கவேண்டும். விபத்து இல்லாத மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையினை கொண்டாடிட அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 26 Sep 2023 10:42 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோபல் பரிசு பெற்ற புத்தங்கள்: ஆட்சியர்...
  2. தமிழ்நாடு
    டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் முடங்கிய மீன்பிடி தொழில்
  3. லைஃப்ஸ்டைல்
    New Year Wishes In Tamil 2024 புத்துணர்ச்சியைத் தரும் புத்தாண்டே ...
  4. சேலம்
    சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்கள்
  5. சினிமா
    பாட்டு இல்லாத படம் குற்றவாளி! அமீரின் முதல் படம் இதுதான்...!
  6. தமிழ்நாடு
    வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
  7. சிவகாசி
    சிவகாசியில் ஆதரவற்றோர் பள்ளியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
  8. சினிமா
    சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு
  9. தமிழ்நாடு
    வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுவினர் அஞ்சலி