மாவட்ட அளவிலான ஓரி விழா பேச்சுப்போட்டி: மலர் மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம்

மாவட்ட அளவிலான ஓரி விழா பேச்சுப்போட்டி: மலர் மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம்
X

மாவட்ட அளவில் நடைபெற்ற ஓரி விழா பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற, பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சஸ்மிதாவுக்கு, கலெக்டர் உமா, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி ஆகியோர் பரிசு வழங்கினார்கள்.

நாமக்கல் மாவட்ட அளவிலான ஓரி விழா பேச்சுப்போட்டியில், பரமத்தி மலர் மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

நாமக்கல் மாவட்ட அளவிலான ஓரி விழா பேச்சுப்போட்டியில், பரமத்தி மலர் மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

தமிழக அரசு சார்பில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 2 நாட்கள் வல்வில் ஓரி விழா நடைபெற்றது. இதில் கொல்லிமலையை ஆட்சி செய்த மன்னர் வல்வில் ஓரியின் வீரத்தையும், கொடைத்தன்மையும் சிறப்பிக்கும் வகையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

இதில், பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் வகுப்பு மாணவி சஸ்மிதா கலந்துகொண்டு பேச்சுப்போட்டியில் சிறப்பாக பேசி முதலிடம் பெற்றார். வல்வில் ஓரி விழா நிறைவு விழாவில், மாவட்ட ஆட்சியர் உமா, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாணவி சஸ்மிதாவைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்கள்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவி சஸ்மிதாவை, மாணவிக்குப் பயிற்சி அளித்த ஆசிரியை ஜான்சிராணி ஆகியோருக்கு மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், துணைத் தலைவர் ராஜேந்திரன், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி தங்கராஜு, இயக்குநர்கள், முதல்வர் ராஜசேகரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story