நாமக்கல் வேதபுரீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் உழவாரப்பணி

நாமக்கல் வேதபுரீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் உழவாரப்பணி
X

Namakkal news-நாமக்கல் வேதபுரீஸ்வரர் கோயிலில், அம்மையப்பர் அறக்கட்டளை சார்பில், உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Namakkal news- நாமக்கல் வேதநாயகி உடனுறை வேதபுரீஸ்வரர் கோயிலில் உழவாரப்பணி மற்றும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் வேதநாயகி உடனுறை வேதபுரீஸ்வரர் கோயிலில் உழவாரப்பணி மற்றும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் அம்மையப்பர் அறக்கட்டளை உழவாரப்பணிக்குழு சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் உழவாரப்பணி மற்றும் திருவாசகம் முற்றோதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில், டீச்சர்ஸ் காலனியில் உள்ள வேதநாயகி உடனுறை வேதபுரீஸ்வரர் மற்றும் கல்வி விநாயகர் திருக்கோயிலில் உழவாரப்பணியை மேற்கொண்டனர். கோயில் வளாகத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் தூய்மைப்பணியை மேற்கொண்டு சுத்தம் செய்தனர். இந்தப் பணியில் நாமக்கல் அம்மையப்பர் அறக்கட்டளையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு உழவாரப் பணியில் ஈடுபட்டனர். கோயில் வளாகம், உள் மற்றும் வெளி பிரகாரங்கள் சுத்தம் செய்யப்பட்டது.

பின்னர் நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில், ஆன்மீக சொற்பொழிவாளர் குளித்தலை ராமலிங்கம் கலந்துகொண்டு, என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்மையப்பர் அறக்கட்டளை நிர்வாகிகள் தேசிகர் சுப்பிரமணியன், ஜெய் பத்மா, சுபத்ரா தேவி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story