பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவிலுக்கு புதிய கிரிவலப்பாதை

Namakkal news- பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவிலுக்கு புதிய கிரிவலப்பாதை அமைப்பதற்காக, சிவனடியார்கள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
Namakkal news, Namakkal news today- பரமத்திவேலூர் தாலுகா, பொத்தனூர் அருகே உள்ள பச்சை மலை முருகன் கோவிலுக்கு, புதியதாக கிரிவல பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, பொத்தனூர் பச்சை மலையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதியதாக கிரிவல பாதை அமைக்க பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் முடிவு செய்தனர். இதையொட்டி, பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, நாமக்கல், கரூர், சேலம் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவனடியார்கள் மற்றும் ஏஎஸ்கே அனைத்து சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பாக கிரிவலப் பாதை அமைப்பதற்காக உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற சிறப்பு உழவாரப்பணியில், பச்சைமலையை சுற்றி உள்ள காய்ந்த செடி கொடிகள் மற்றும் புதர்களை அகற்றி புதியதாக கிரிவலப் பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
150 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப்பணியில் கலந்து கொண்டு பச்சை மலையினை தூய்மை செய்தனர்.
விழா ஏற்பாட்டினை கோவில் நிர்வாகிகள், சிவனடியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu