மின் கட்டண உயர்வை கண்டித்து பள்ளிபாளையத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து  பள்ளிபாளையத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
X

தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, அதிமுக சார்பில், பள்ளிபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ பேசினார்.

மின் கட்டண உயர்வை கண்டித்து பள்ளிபாளையத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, பள்ளிபாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் திடீரென்று மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி எம்எல்ஏ போராட்டத்திற்கு தலைமை வகித்தார். தொடர்ந்து மின் கட்டண உயர்வைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்குப் பின் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. மின் கட்டணம் உயர்த்தியதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. இவை உள்பட மின்சார வாரியத்திற்கு ரூ.42 ஆயிரம் கோடி வருகிறது. ஆனால், தற்போது ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டம் என்கின்றனர்.

உதய் மின் திட்டத்தில் உள்ள நிபந்தனையை நீக்கிய பின்னர் தான் அத்திட்டத்தில் கையெழுத்திடப்பட்டது. கையெழுத்திட்ட பின் 4 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் இருந்தது. அப்போது மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

பரமத்திவேலூர் எம்எல்ஏ சேகர், முன்னாள் அமைச்சர் சரோஜா, நகரச் செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட திரளானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story