பிரதமர் மோடியைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடியைக் கண்டித்து  நாமக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

பிரதமர் மோடியைக் கண்டித்து, நாமக்கல் பார்க் ரோட்டில், மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆப்பாட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோடியைக் கண்டித்து, நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோடியைக் கண்டித்து, நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசும்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசினார். அப்போது பாஜ எம்.பி. அனுராக் தாக்கூர் அதை விமர்சனம் செய்து பேசினார். இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அனுராக் தாக்கூரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில் அனுராக் தாக்கூரின் பேச்சு பிரதமர் மோடியின் எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி பிரதமர் மோடியைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பிரதமர் மோடியைக் கண்டித்து, நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்திக் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வீரப்பன், சீனிவாசன், நாமக்கல் நகர காங்கிரஸ் தலைவர் மோகன், ராசிபுரம் நகர காங்கிரஸ் தலைவர் முரளி, வட்டாரத் தலைவர்கள் எருமப்பட்டி தங்கராஜ், புதுசத்திரம் இளங்கோ, கொல்லிமலை குப்புசாமி, சேந்தமங்கலம் ஜெகநாதன், டவுன் பஞ்சாயத்து காங்கிரஸ் தலைவர்கள் வெண்ணந்தூர் சிங்காரம், மோகனூர் சீனிவாசன், காளப்பநாயக்கன்பட்டி கணேசன், மகளிர் காங்கிரஸ் ராணி, தொழிற்சங்க காங்கிரஸ் பாலு, அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் லட்சுமி, சதீஸ், பழனிவேலு சரவணன், நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஜபுருல்லா, நடேசன், லோகநாதன், அருணகிரி, பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

Tags

Next Story
ai products for business