நாமக்கல் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தில் பங்கேற்ற கலெக்டர்

நாமக்கல்லில் நடைபெற்ற தீவிர எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலியில் மாவட்ட கலெக்டர் உமா கலந்துகொண்டார்.
நாமக்கல்லில் எய்ட்ஸ் தடுப்பு தீவிர விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை மாவட்ட கலெக்டர் உமா துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத்துறை சார்பில் எய்ட்ஸ் மற்றும் பால்விலை நோய் தடுப்பு குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் தொடக்க விழா, நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா பிரச்சார இயக்கத்தை தொடக்கி வைத்துப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சமூகத்தின் அனைத்து பிரிவினரிடமும், எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முதன்மை கவனம் செலுத்துவதற்கான தீவிர பிரச்சார இயக்கத்தை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வகுத்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 12ம் தேதி, சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு ஆகஸ்ட்-12 முதல் அக்டோபர் 12 வரை 60 நாட்களுக்கு, நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களிடம் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், எய்ட்ஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் கிராமிய கலைநிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, மக்கள் அதிகம் கூடுகின்ற பகுதிகளில் கல்லுரி மாணவ மாணவிகள் பங்குபெறும் வகையில் நடத்தப்படும். மக்கள் பயன்படுத்தும் பயணியர் ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டுதல் மற்றும் விழிப்புணர்வு மனிதசங்கிலி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்றார். தொடர்ந்து, பயணியர் ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட நல அலுவலர் பூங்கொடி, ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஸ்கண்ணன் உட்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu