நாமக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்: கலெக்டர் வெளியீடு

நாமக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்: கலெக்டர் வெளியீடு
X

நாமக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர் ஷ்ரேயா சிங்

நாமக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டு, அரசியல் கட்சியினருக்கு வ ழங்கினார்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (எஸ்சி), சேந்தமங்கலம் (எஸ்டி), நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்ட சபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட், அரசியில் கட்சி பிரதிநிதிகளிடம் வழங்கினார்.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14,25,198.

ராசிபுரம் (எஸ்சி) சட்டசபை தொகுதியில் 1,13,085 ஆண், 1,19,375 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் 6 என மொத்தம் 2,32,466 வாக்காளர்கள் உள்ளனர்.

சேந்தமங்கலம் (எஸ்டி) சட்டசபை தொகுதியில் 1,19,092 ஆண், 1,25,110 பெண் வாக்காளர்கள், 30 மற்றவர்கள் என மொத்தம் 2,44,232 வாக்காளர்கள் உள்ளனர்.

நாமக்கல் சட்டசபை தொகுதியில் 1,22,835 ஆண், 1,31,964 பெண், 47 மற்றவர்கள் என மொத்தம் 2,54,846 வாக்காளர்கள் உள்ளனர்.

பரமத்திவேலூர் சட்டசபை தொகுதியில் 1,05,778 ஆண், 1,14,976 பெண், 8 மற்றவர்கள் என மொத்தம் 2,20,762 வாக்காளர்கள் உள்ளனர்.

திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில் 1,11,712 ஆண், 1,18,421 பெண், 46 மற்றவர்கள் என மொத்தம் 2,30,179 வாக்காளர்கள் உள்ளனர்.

குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் 1,23,193 ஆண், 1,29,465 பெண், 55 மற்றவர்கள் எனமொத்தம் 2,52,713 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 6,95,695 ஆண் வாக்காளர்கள், 7,39,311 பெண் வாக்காளர்கள் மற்றவர்கள் 192 என மொத்த வாக்காளர்கள் 14,35,198 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த நவ. 9ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்கள் 14,30,953. புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் 24,090, நீக்கம் செய்யப்பட்டவர்கள் 19,845. தற்போது மொத்த வாக்காளர்கள் 14,35,198 வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.

புதியதாக சேர்க்கப்பட்ட, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் தபால் அலுவலகம் மூலமாக வழங்கப்படும்.

இது குறித்து கலெக்டர் கூறுகையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் வரை தொடர் திருத்த முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும். 31.12.2005 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளாதவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புவர்களும் உரிய விண்ணப்பங்களை ஆர்டிஓ, வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் அளிக்கலாம். மேலும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 77 சதவீத வாக்காளர்கள், ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர். எனவே, இதுவரை தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளாதவர்களும் உடனடியாக இணைத்து, நாமக்கல் மாவட்டம் 100 சதவீத இலக்கினை விரைவில் அடைய ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, வருவாய் கோட்டாட்சியர் மஞ்சுளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், தனி வட்டாட்சியர் திருமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!