சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாமக்கல்லில் இருந்து நிவாரண பொருட்கள்

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாமக்கல்லில் இருந்து நிவாரண பொருட்கள்
X

சென்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நாமக்கல்லில் இருந்து இரண்டாவது நாளாக நிவாரணப்பொருட்களை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நாமக்கல்லில் இருந்து இரண்டாவது நாளாக நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.

சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து இதுவரை 13 லாரிகளில் ரூ. ரூ.83.77 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக, தொடர்ந்து பெய்துவந்த கண மழையால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 5ம் தேதி நள்ளிரவு ஒரு லாரி சென்னை மாநகராட்சி மண்டலம் 14, 15-க்குட்பட்ட (புழுதிவாக்கம்) பகுதிகளுக்கு பல்வேறு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 6ம் தேதி புழுதிவாக்கத்திற்கு ஒரு லாரி மூலமும், திருவொற்றியூருக்கு 7 லாரிகளிலும், மணலிக்கு 1 லாரி மூலமும், மொத்தம் 10 லாரிகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ரொட்டி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில், பாய், போர்வை, நைட்டி, நாப்கின்கள், மெழுகுவர்த்திகள் மற்றும் உணவு பொருட்கள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்ந்து, இன்று 7ம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் திருவொற்றியூருக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் 3 லாரிகளை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதுவரை பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14, 15-க்குட்பட்ட புழுதிவாக்கம், திருவொற்றியூர் மற்றும் மணலி உள்ளிட்ட பகுதிகளுக்கு மொத்தம் 13 லாரிகளில் ரூ.83.77 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!