நாமக்கல்லில் 8ம் தேதி கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர்க்கும் முகாம்..!
கோப்பு படம்
நாமக்கல்லில் 8ம் தேதி கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர்க்கும் முகாம் நடக்கவுள்ளது.
நாமக்கல்,
நாமக்கல்லில் வருகிற 8ம் தேதி, கூட்டுறவு பணியாளர் குறைதீர் நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் உத்தரவின்பேரில், கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை கேட்டு தீர்வு செய்யும் வகையில், 2 மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அறிவுரைப்படி 2 மாதங்களுக்கு ஒரு முறை 2வது வெள்ளிக்கிழமை அன்று, மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறை தீர்க்கும், பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
3வது பணியாளர் நாள் நிகழ்ச்சி வருகின்ற 8ம் தேதி மாவட்ட கலெக்டர் ஆபீஸ் கட்டிடத்தின், 2வது தளத்தில் உள்ள மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கூட்டுறவு நிறுவன பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை நிகழ்ச்சியில் நேரடியாக வழங்கலாம்.
அந்த விண்ணப்பங்கள் நிகழ்ச்சியின்போதே ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு 2 மாதங்களுக்குள் தீர்வு செய்யப்படும். எனவே, நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து நிலை பணியாளர்களும் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின், பணியாளர் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மனு அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu