முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு..!

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு..!
X

கோப்பு படம் 

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் :

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள விருப்பும் உள்ளவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, கடந்த ஆண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அப்போட்டிகளுக்காக மொத்த பரிசுத்தொகை ரூ.25.00 கோடி உட்பட மொத்தம் ரூ.50.89 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்து ஆண்டில் நடத்தப்பட இருக்கும் போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மர்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தினை https://sdat.tn.gov.in என்ற வெப்சைட்டில் தெரிந்துகொண்டு, ஆன்லைன்மூலம் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெற்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மேலும் இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதன் முறையாக நான்காம் இடம் பெற்றவர்க்கும் மூன்றாம் பரிசிற்கு இணையான பரிசி;னை வழங்க உள்ளது. இந்த ஆண்டு, தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களும், 17 வயது முதல் 25 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்களும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப்பிரிவினரும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களும் விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளலாம். போட்டியில் கலந்துகொள்ள வருகிற செப். 2ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

போட்டியாளர்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 9514 000 777 என்ற செல்போன் எண் மூலம் தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story