ஏ.டி.எம்., கொள்ளையர்களைப் பிடித்த நாமக்கல் போலீசாருக்கு முதல்வர் பாராட்டு!
Namakkal news-வடமாநில கொள்ளையர்களை துரத்திப்பிடித்து கைது செய்து, நாமக்கல் மாவட்ட போலீசாரை, தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டி, அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். அருகில் போலீஸ் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம்.
Namakkal news, Namakkal news today- வடமாநில ஏ.டி.எம். கொள்ளையர்களை துரத்திப்பிடித்து கைது செய்த, நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து, அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.
கடந்த செப். 27ம் தேதி, கேரள மாநிலம் திருச்சூரில், 3 ஏ.டி.எம்.களில், வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் அவர்கள் ஒரு காரில் ஏறி தப்பி நகரைவிட்டு வெளியேறி, நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியில் காருடன் உள்ளே ஏறி தப்பிச்சென்றனர். அவர்கள் நாமக்கல் வழியாக தப்பிச்செல்லக்கூடும் என்ற தவகல் நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு கிடைத்தது.
அதையடுத்து, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் தலைமையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீசார், கேரளாவில் இருந்து வந்த கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தினர். அந்த லாரிநிற்காமல் வேகமாக சென்றது. போலீசார் ஜீப்பில் விரட்டிச் சென்று கன்டெய்னர் லாரியை துரத்திப்பிடித்தனர். பின்னர் அவர்களைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தை பாராட்டி கேரள போலீஸ் டிஜிபி டாக்டர் ஷேக் தர்வேஷ் சாஹிப், தமிழக காவல் துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாமக்கல் மாவட்ட போலீசார் வேகமாக செயல்பட்டு, சம்பவம் நடந்த, 6 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை பிடித்தது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அரசு விழாவில் பங்கேற்கபதற்காக, நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசு விருந்தினர் மாளிகையில், நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் உள்ளிட்ட ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த போலீசாரைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்து, அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து, இந்த சம்பவத்தின்போது, ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றிய நாமக்கல் மாவட்ட எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், டி.எஸ்.பி.க்கள் இமயவர்மன், முருகேசன், ராஜா, இன்ஸ்பெக்டர்கள் தவமணி, ரங்கசாமி, மற்றும் எஸ்.ஐ.கள் என, மொத்தம் 23 பேருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கேடயம் வழங்கினார். நிகழ்ச்சியில் போலீஸ் டிஜிபி (சட்டம், ஒழுங்கு) டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu