நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் பயணிகள் நிழற்கூடம் : எம்.பி. திறந்து வைத்தார்..!

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அருகில்  பயணிகள் நிழற்கூடம் : எம்.பி. திறந்து வைத்தார்..!
X

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள, புதிய பயணியர் நிழற்கூடத்தை, ராஜேஷ்குமார் எம்.பி. திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் உமா, எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் ரூ. 13.55 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்கூடத்தை ராஜேஷ்குமார் எம்.பி. திறந்து வைத்தார்.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் பயணிகள் நிழற்கூடம் : எம்.பி. திறந்து வைத்தார்

நாமக்கல் :

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் ரூ. 13.55 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்கூடத்தை ராஜேஷ்குமார் எம்.பி. திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி, திருச்செங்கோடு ரோட்டில் கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. அரசு போக்வரத்துக்கழகம் சார்பில், நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து, அரசு மருத்துவக்கல்லூரிக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி அருகில், கல்லூரி மாணவ மணவியர், பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி.யின், பார்லி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 13.55 லட்சம் மதிப்பில், புதிய பயணியர் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய பயணியர் நிழற்கூடம் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் விழாவில் கலந்துகொண்டு புதிய பயணியர் நிழற்கூடத்தை திறந்து வைத்து, பஸ் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி, நாமக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சிவக்குமார், டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நாமக்கல் தெற்கு நகர திமுக செயலாளர் ராணாஆனந்த் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story