பாஜக தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

பாஜக தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து  நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

Namakkal news-தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை தரக்குறைவாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து, நாமக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Namakkal news- பாஜக தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Namakkal news, Namakkal news today- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை தரக்குறைவாக விமர்சனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை, பாஜக தலைவர் அண்ணாமலை தரக்குறைவாக பேசியதாகவும், அதைக்கண்டித்தும், பாஜக தலைவர் மன்னிப்பு கேட்கக்கோரியும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தித்தொடர்பாளர் டாக்டர் செந்தில், முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார காங்கிரஸ் தலைவர்கள் தங்கராஜ், இளங்கோ, ஷேக் உசேன், மகளிர் அணி நிர்வாகி ராணி, சாந்திமணி, சிவாஜிசேகர், செல்வம், பாலு, ராஜேந்திரன் உள்ளிட்ட திரளானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்திவிட்டனர்.

Tags

Next Story