பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை: பயனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு

Namakkal news-பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு (கோப்பு படம்)
Namakkal news, Namakkal news today- பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் டெபாசிட் பெற்றுள்ள பயனாளிகள், முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1992ம் ஆண்டு முதல் ரூ.1500 மற்றும் ரூ.15,200 டெபாசிட் பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், முதிர்வுத் தொகையை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் ரூ.1500 மற்றும் ரூ.15,200 வைப்புத்தொகை பத்திரம் அசல் மற்றும் ஜெராக்ஸ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் (பயனாளியின் பெயரில், தனி வங்கிக்கணக்கு), பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், பிறப்புச்சான்றிதழ் நகல் மற்றும் ஆதார்கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்க வேண்டும்.
விண்ணப்ப ஆவணங்களை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu