100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி 2,000 அரசு பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

Namakkal news- நாமக்கல்லில் 100 சதவீதம் தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி, 2,000 அரசு அலுவலர்கள் கலந்துகொண்ட பேரணி, மாவட்ட ஆட்சியர் கலெக்டர் உமா, தேர்தல் கமிஷன் போலீஸ் பார்வையாளர் உஷாராதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சுமார் 2 ஆயிரம் அரசு அலுவலர்கள் கலந்துகொண்ட தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏப். 19ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் நாளான ஏப்ரல் 19 ஆம் தேதியினை அனைத்து வாக்காளர்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், அனைத்து துறை அலுவலர்களும் தேர்தல் நாளான ஏப். 19 அன்று வாக்குப்பதிவை அமைதியான முறையில் நடத்திட தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையிலும், போலீசார் மற்றும் அரசு அலுவலர்களைக் கொண்ட விழிப்புணர்வு பேரணி துவக்க விழா, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தேர்தல் கமிஷன் போலீஸ் பார்வையாளர் உஷாராதா நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். நாமக்கல் ஆட்சியர் உமா கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பேரணியில் நடந்து சென்றார்.
நாமக்கல் மாவட்டத்தில் 14,32,307 வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இரவு பகலாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் சுமார் 2,000 போலீசார், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி பரமத்தி ரோடு, உழவர் சந்தை வழியாக சென்று நாமக்கல் பார்க் ரோட்டில் நிறைவடைந்தது. முன்னதாக மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் 100 சதவீதம் வாக்களிப்பதற்கான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu