/* */

நாமக்கல்லில் பஸ் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை; ரூ. 4.50 கோடி சிக்கியது

Namakkal news- நாமக்கல் நகரில் உள்ள பஸ் அதிபர் வீட்டில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ. 4.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் பஸ் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை; ரூ. 4.50 கோடி சிக்கியது
X

Namakkal news -நாமக்கல், காந்தி நகரில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய, பஸ் அதிபர் சந்திரசேகரனின் வீடு. (உள்படம்) தொழில் அதிபர் சந்திரசேகரன்.

Namakkal news, Namakkal news today- தேர்தலில் பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைத்துள்ளதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, நாமக்கல் பஸ் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை பறக்கும்படையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ. 4.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை, கடந்த மார்ச் 16ம் தேதி மத்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் கமிஷன் மூலம், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கும், பறக்கும்படை, நிலையான கண்காணிப்புபுக்குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரித்துறை மூலம் குறிப்பிட்ட இடங்களில் பறக்கும்படையினர் அமைக்கப்பட்டு, பெரிய அளவில் நடைபெறும் பண பரிமாற்றங்களை கண்காணித்து வருகின்றனர்.

இக்குழுவினர் இரவு பகல் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணம் இன்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச்சென்றாலோ, தங்கம், பரிசுப்பொருட்கள், மதுபானம் போன்றவை எடுத்துச்சென்றாலோ பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்த உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர்.

நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் உள்ள காந்தி நகர் பகுதியில் உள்ள வீட்டில் சந்திரசேகரன் (70) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனியார் பஸ் அதிபர். மேலும் இவருக்கு சொந்தமாக பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளன. இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சென்னையில் இருந்து விரைந்த வந்த வருமானவரித்துறை பறக்கும்படை அதிகாரிகள், சந்திரசேகரனின் வீட்டுக்குள் சென்று, திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த ரொக்கப்பணம் ரூ. 4 கோடியே 50 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இந்த திடீர் ரெய்டு சம்பவத்தால் நாமக்கல் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 3 April 2024 9:45 AM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
 2. காஞ்சிபுரம்
  வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
 3. காஞ்சிபுரம்
  வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
 4. லைஃப்ஸ்டைல்
  துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
 5. குமாரபாளையம்
  கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
 6. ஈரோடு
  ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
 7. காஞ்சிபுரம்
  அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
 8. காஞ்சிபுரம்
  12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
 9. லைஃப்ஸ்டைல்
  அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
 10. ஈரோடு
  ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...