நாமக்கல் லோக்சபா தேர்தலில் 40 வேட்பாளர்கள் போட்டி: 3 ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்பாடு என ஆட்சியர் தகவல்

நாமக்கல் லோக்சபா தேர்தலில் 40 வேட்பாளர்கள் போட்டி: 3 ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்பாடு என ஆட்சியர் தகவல்

Namakkal news- சேந்தமங்கலத்தில், 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஓட்டுப்போடுவதற்கான பணியில், பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் உமா பேசினார்.

Namakkal news- நாமக்கல் லோக்சபா தேர்தலில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 3 ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் லோக்சபா தேர்தலில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதனால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 3 எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், வீட்டில் இருந்து ஓட்டுப்போடும் நிகழ்வில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான உமா தலைமை வகித்து பேசியதாவது:

இந்திய தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக, போட்டோவுடன் கூடிய பூத் சிலிப்பிற்கு பதிலாக, வாக்காளர் தகவல் சீட்டை அச்சிட்டு வழங்க உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 1,628 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம், அனைத்து வாக்காளர்களுக்கும், அவர்கள் வீட்டிலேயே பூத் சிலிப் வழங்கும் பணி நடந்து வருகிறது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, 12 வகையான மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும்.

வாக்காளர் இறந்திருக்கும் பட்சத்தில், அவரது பூத் சிலிப் எக்காரணம் கொண்டும் மற்றவர்களிடம் வழங்கக் கூடாது. வரும் 8ம் தேதிவரை, 85 வயதுக்கு மேற்பட்டவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம் அளித்தவர்கள் வீட்டிலிருந்து ஓட்டுபோடலாம். 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாமக்கல் லோக்சபா தேர்தலில், 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதனால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் 3 எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஓட்டுப்பதிவின் போது வாக்களார்கள் சுதந்திரமாக தங்களது ஓட்டுகளை செலுத்திடும் வகையில், அனைத்து பணியாளர்களும் பணியாற்ற வேண்டும் என அவர் கூறினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன், தாசில்தார் சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story